கீழே இணைக்கப்பட்டிருக்கும் பட்டிமன்ற நிகழ்வின்போது (2014.05.03 பிரதேச செயலகம்) குறித்த நபர் ஒருவரை தோலுரித்து காட்டிவிட்டேனாம். அவர் விவாதிக்கவில்லையாம்; வாசித்து காட்டினாராம். இதனை யான் யோசித்து அவையிலே கூறிவிட்டேனாம். அதனால் அவருக்கு வந்ததாம் ஆக்ரோஷம்.
அதனால் கலை இலக்கியப் பணியில் இருந்து என்னை தூக்கிஎறிந்து விட்டாராம். என்னை புறந்தள்ளி அவர் புகழ்தேட புறப்பட்டுவிட்டாராம். புகழ்தேடுவாரா? இகழ்தேடி மண் கவ்வுவாரா? காலம் பதில் சொல்லும்.
2016.07.19 ம் திகதியன்று மண்மலையோரம் நடைபெறவிருக்கும் பட்டிமன்ற நிகழ்விலும் கவியரங்கிலும் எனக்கு இடம்தராத நீங்களா என்னை விருதுவழங்கி கௌரவிக்கப்போகுறீர்கள்?
விருது வழங்கும் பட்டியலில் எனது பெயரும் உள்ளதாய் தெரிவித்தீர்கள். இதற்கு என்மனம் மகிழ்வதாய் இல்லை. நீங்கள் போடும் இந்த வேஷம் இந்த ஊராருக்கு விளங்காமல் போகலாம். இந்த ஆசானுக்கு புரியாமல் போகுமா?
25 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியப் பணியில் ஈடுபட்ட கலை இலக்கிய வாதிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளதாய் தெரித்துள்ளீர்கள்; வழங்குங்கள்!
கலை இலக்கிய பணியில் அடியேன் 25 வருடங்கள் ஈடுபடவில்லை. அதனால் அந்த விருதுக்குரியவன் நானல்லன்!
நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.
கலை இலக்கியவாதியாய் கடந்த காலங்களில் நான் இருந்திருந்தால் பொத்துவில் பிரதேச செயலக கலை கலாசார அதிகார சபையின் நிருவாகிகளின் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருக்குமே. அதில் என்னை புறந்தள்ளினீர்கள். அது உங்கள் விருப்பம்.
கலை இலக்கியப்பணியில் உள்ளவன் நானென்றால் பொத்துவில் கலை இலக்கியப் பேரவையில் என் பெயரும் இடம்பெற்றிருக்குமே. அங்கேயும் புறந்தள்ளினீர்கள். அது உங்கள் விருப்பம்.
இப்பேர்பட்ட என்னையா நீங்கள் கௌரவிக்க எண்ணிணீர்கள். உங்கள் வஞ்சகப்புகழ்ச்சிக்கு ஆளாகும் நிலையில் நானில்லை. நீங்களே அவ்விருதையும் சூடிக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு மதியிருந்தால் உங்கள் வேஷத்தை தெரிந்து கொள்ளட்டும்.
'மண்மலையில் ஒரு பொன்மாலை' இந்த மகுடத்தை ஆக்கித் தந்தவன் நானல்லவா. அதை எப்படி உங்கள் கலையுள்ளங்கள் மறந்தன. காலம் உங்களுக்கு கட்டாயம் பாடம் புகட்டும். எதிர்காலச்சந்ததிகள் உங்களை இனங்காணட்டும்.
கலை இலக்கிய மொழிப்பாடத்தின் மூலம் வழிப்படுத்திய ஆசான் எனக்கு சரியான பாடம் கற்பித்தீர்கள். பாடம் சரிதானா? இறைவன் தீர்மானிப்பான். இருந்து பாருங்கள்.
இந்த ஆசானுக்கா நீங்கள் பாடம் புகட்ட நினைத்தீர்கள். கவிழ்ந்து போகட்டும் உங்கள் மகுடம்!!
- மாஸ்டர் ஏ.எல்.ஏ முகம்மத் -
2016-07-18
குறித்த கட்டுரை முஹம்மத் ஆசிரியரின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.