இளம் கலைஞர் அறிமுகம்- கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான் (பசறிச்சேனை)

பொத்துவில் பிரதேசம் பல கலைஞர்களை இந்த உலகுக்கு பிறப்பித்திருக்கிறது. அண்மைக்காலமாக இணையத்தளங்கள் மற்றும் வானொலி பத்திரிகை என்று பல ஊடகங்களில் கவித்திறமையினால் தன்னை அடையாளப்படுத்திவிரும் கவிஞர் ஒருவரை உங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பொத்துவில் நெற் மகிழ்ச்சியடைகிறது.ajmal book (3)

தனது கவிதைகளின் மூலம் ஈழத்து கலைஞர்கள் மற்றும் இந்திய கலைஞர்களின் மனதில் இடம் பிடித்து புதிய கவிதைகளின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார் கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான்.

பொத்துவில் பசறிச்சேனையை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் அஜ்மல்கான் சாதாரண குடும்பப்பின்னனியை கொண்டவர் பசரிச்சேனை அல் இஸ்ராக் வித்தியாலயத்தில் உயர்தரப்பிரிவில் கலைத்துறையில் பயின்றுவருவதுடன் 2016 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் தனது முதலாவது கவிதை தொகுதியை வெளியிடவுள்ளார்.

இளம் கவிஞனாக மரபு மற்றும் புதுக் கவிதைகள் மூலம் பிராகாசித்து வரும் அஜ்மல்கான் உடன் நாம் மேற் கொண்ட உரையாடல். கேள்வி- பொத்துவில் நெற் இணையத்தளத்தினால் இளம் கலைஞர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வின் ஊடாக இரண்டாவதாக தங்களை அறிமுகம் செய்ய முனைகிறோம் உங்களை பற்றிய அறிமுகம் ஒன்றை தர முடியுமா?

பதில்:- நான் அஜ்மல்கான் பசறிச்சேனையை பிறப்பிடமாக கொண்டவன் தயாயின் முழு அரவனைப்பில் வாழ்துவருகிறேன் பாடசாலைக் கல்வியினை தொடர்ந்துவருகிறேன். அதற்கு மேல் இல்லை. கேள்வி- கவிதை எழுதும் பழக்கம் எப்போதிருந்து உங்களிடம் இருக்கிறது?

பதில்:- எப்போதிருந்து என்று தெரியாது நேரம் கிடைக்கின்றபோது எழுதுவேன் கடந்த இரண்டு வருடங்களாகவே அதிகமான கவிதைகளை எழுதிவருகிறேன். கேள்வி- உங்களுடை படைப்புக்கள் எவற்றின் மூலம் வெளிவருகின்றன உங்களுக்கான அங்கீகாரம் உங்கள் முகநுாலில் கிடைத்திருப்பதை காணக் கூடியதாகவுள்ளது அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்- என்னுடைய கவிதைகள் பேஸ்புக்கிலும் நவீன ஊடகங்களிலும் வெளிவருகின்றன பத்திரிகைகளின் மூலமாகவும் எனது கவிதைகள் வெளிவரவேண்டும் என பிரயத்தனப்படுகிறேன் பத்திரிகைகளுக்கு கவிதைகளை அனுப்பிவருகிறேன் விரைவில் தினசரி நாளிதழில் காணமுடியும் என நம்புகிறேன். எனக்கான உத்வேகத்தை பேஸ்புக் நண்பர்கள் இடும் பின்னுாட்டங்கள் தருகின்றன.ajmal book (1)

கேள்வி- பொத்துவில் ஊரில் பிரபலமான பல கவிஞர்கள் உள்ளனர் உங்களடைய கவிதைகளை அவர்களிடம் காட்டியிருக்கின்றீர்களா என்ன சொன்னார்கள்?

பதில்-‌ என்னுடைய கவிதைகளை கவிஞர் பொத்துவில் அஸ்மின் சகோததரிடம் காட்டினேன் தொடர்ந்து எழுதுங்கள் நன்றாக இருக்கிறது என்று எனக்கு ஊக்கமளித்தார். மற்றும் பலர் உங்களுடைய படைப்புகளை தொகுப்பாக நுாலுருவில் வெளியிடுங்கள் என்றும் கூட ஊக்கமளித்தனர்.

கேள்வி- உங்களுடைய கவிதை தொகுதி பற்றி சொல்லுங்களேன் பதில்- என்னுடைய முதலாவது கவிதை தொகுதி விரைவில் வெளிவர இருக்கிறது 2016 ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட உள்ளேன் சிதறிய சிறுதுளிகள் எனும் ‌தலைப்பில் வெளிவர காத்திருக்கிறது. செந்தணல் வெளியீட்டகம் அதனை வெளியிடுகிறது.

கேள்வி- உங்களுக்கு பிடித்த கவிஞர் யார்?

பதில்– கவிஞர் கண்ணதாசன் ஐயா மற்றும் நமது கவிஞர் பொத்துவில் அஸ்மின் இருவரையும் எனக்கு பிடிக்கும்.

கேள்வி- உங்களுடை கவிதைப்புத்தக வெளியீட்டுக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்கள்

பதில்- நிறைய நண்பர்கள் நலண் விரும்பிகள் செய்கிறார்கள் குறிப்பாக எனது தாயாரின் அதீத உழைப்பே இதில் பினைந்திருக்கிறது எனது குடும்பத்தை வழி நாடாத்தி பொருளாதார உதவியைக் கூட எனது தாயார்தான் செய்துவருகிறார். எனது தாய்க்கு நன்றிகள்.

கேள்வி- உங்களுடைய இலட்சியம் என்ன கவிதை தவிர வேறு ஏதாவது படைப்புக்களை வெளியிடும் எண்ணம் உள்ளதா?

பதில்- ஆம் பாடல் ஒன்றை எழுதி இயக்கும் எண்ணம் உள்ளது. என்னுடைய இலட்சியம் ஒரு அறிப்பாளராக வருவதுதான் பாடசாலை கல்வி முடிந்த பிறகு அது பற்றி தெரிந்துகொண்டு பட்டை தீட்ட ஆசை. ம்.....

கேள்வி- நீங்கள் நன்றி சொல்ல ஆசைப்படும் நப‌ர்கள் யா‌ராவது இருந்தால் அவற்றை கூட தெரியப்படுத்தலாம்.

பதில்- எல்லோருக்கும் நன்றிகள் குறிப்பாக எனது தயாருக்கு நன்றிகள். பொத்துவில் நெற் இன் இந்த முயற்சி என்னைப்போன்று பொத்துவில் மண்ணுக்கு எதாவது ஒரு வகையில் கௌரவத்தை பெற்றுக்கொடுக்வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்கும் பயணுள்ளதாக இருக்கும் அந்த வகையில் பொத்துவில் நெற் இணையத்தளத்திற்கும் நன்றிகள் இன்னும் இலைமறை காய்களாக உள்ள பலரை பொத்துவில் நெற் வெளியுலகிற்கு அடயாளம் காட்டவேண்டம் என கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்வரும் 2016 ஜனவரி 9 திகதி நமது பொத்துவில் கவிஞர் அஜ்மல்கான் இன் புத்தக வெளியீடு இடம்பெறவுள்ளது அங்கு சென்று அவருக்கான அங்கீகாரத்தை நாம் வழங்கவேண்டும் என பொத்துவில் நெற் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கவிஞர் அஜ்மல்கான் இன் பேஸ்புக் முகவரி- https://www.facebook.com/ajmal.cool.520

நேர்காணல்- ஹாஸீம் அஹமது முகைதீன் மற்றும் பஸ்கான் முஹம்மட்

இளம் கலைஞர்களை அறிமுகம் செய்ய தொடர்புகொள்ளுங்கள்- pottuvilnet@gmail.com - 0772796952