கவிஞர் பொத்துவில் ஹலீம் எழுதிய "காதல் சொல்லடி" பாடல் மிக விரைவில்

hlmதென்கிழக்கில் கலைச் செல்வங்களை பிரசவிக்கும் ஊராக பொத்துவில் பலதடவைகள் தன்னுடய பெயரை வெளிக்காட்டியுள்ளது, அந்த வகையில் இளம் கவிஞர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு முகனூலில் தன்னுடைய கவிதைகளை வசீகரிக்கும் சொற்கள் கொண்டு வாசகர்களை கவர்ந்துவரும் இளம் எழுத்தாளர், கவிஞர் பொத்துவில் ஹலீம எழுதிய "காதல் சொல்லடி" என்கிற புதிய பாடல் மிக விரைவில் வெளிவர இருக்கிறது.

தனது முதல் முயற்சி என்பதனால் ரசிகர்களின் மனதுக்கு ரசணையாகக் கொடுக்க‌ வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து பாடலை வீடியோவடிவில் வெளியிடுவதற்கான வேலைகளில்தன்னை ஈடுபடுத்தியுள்ளார், அந்தவகையில் பாடலை வெளியிட முன்பு அதன் முன்னோட்ட புகைப்படத்தை (Poster) இன்று வெளியிட்டுள்ளார்.

இதனால் இதுவரை காலமும் 15.000ற்கும் அதிகமான வாசகர்களைக்கொண்ட தன்னுடைய முகனூல்பக்கத்தில் வெறும் கவிஞனாக இருந்தவர் இன்றோடு பாடலாசிரியர் என்ற இன்னுமொறு பரிணாமத்துடன் தன்னை அடையாளப்படுத்துகிறார்.

பாடல்: காதல் சொல்லடி.

பாடலாசிரியர்: கவிஞர் பொத்துவில் ஹலீம்.

பாடகர்: நுசைக் நிசார்.

பாடல் இசை: தர்சனன்.

பாடலின் வீடியோ பதிவுகள் 50% முடிவடைந்த நிலையில் இம்மாதம் இறுதிப்பகுதிக்குள் முழுப்பாடலையும் வெளியிட பாடல் குழுவினர் மிக வேகமாக தயாரகிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர், இளம் பாடலாசிரியர் பொத்துவில் ஹலீமுக்கும் பாடல் குழுவிற்கும் பொத்துவில்.நெற் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

hlm