மண்ணுக்காய் மலரத் துடித்த
மண்ணீன்ற மைந்தன் நான்
பொன்னுக்காய் பொருளுக்காய் இல்லாமல்
பொதுத் தேர்தலில் கால் வைத்தேன்
பொது நலன் கருதி மட்டும்
நல்லாசி கூறினீர்
நலமுடன் வாழ்த்தினீர்
இன்முகம் காட்டினீர்
இனிதாய் வழியனுப்பினீர்
நல்லவை செய்த நம் தலைமைகளுக்கு
நன்றிக் கடன் செலுத்தினீர்
வெற்றிலை வேப்பிலையானாலும்
மென்று உண்டீர் வெல்லமென
நல்ல பொழுதொன்று நம்மை நாடி வரும்
நான் புரிவேன் நன்றிக் கடன்
நன்றியுள்ள நல் உள்ளங்களை
மறவேன் மறுமை வரைக்கும்
மனமார்ந்த நன்றி கோடி…..
உங்கள் தோழன்
பதுர்கான் மாஸ்டர்