நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்.

அவருக்கு வெறுமனே 1500 ஓட்டு விழும் அது அப்படியோ உதுமானுக்கு போயிடும். இவருடைய மானசீக தலைவர் ஒரு நாள் சொல்லி இருக்கிறார் பொத்துவிலான் புத்தி இல்லாதவன் என்று அப்போ எதுக்கு இவருக்கு நான் ஓட்டுப் போடனும் ?

இவருக்கு ஒரு 5000 ஓட்டு விழும் அவர் வழமை போல கொழும்புல இருக்கிற வீட்டுக்கு ஓய்வு எடுக்க போயிடுவார். தேர்தல் நடக்கும் காலப்பகுதிக்கு மட்டும் வருவார் ஊருக்கு இவருக்கு எதுக்கு நான் ஓட்டு போடனும் ?

இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறாங்க அவங்கள சொல்லி வேலையில்ல வாப்பா அவங்களுக்கு பம்பல் இன்னும் ஹாரம்தான் தின்னுறாங்க .

பைசல்காசிமும் , ஹரிஷும் ,மன்சூர் உம் கொடுக்குற காசிக்கு அப்பாவி மக்களை மரக்கதைகள் , மறந்த கதைகள் சொல்லி திசை திருப்பும் இன்னொரு கூட்டம்.

நமது ஊரானுகளும் சும்மா ஆட்கள் இல்லை கேட்டிருப்பார்கள் இந்த தடவை மரத்தில் ஏறுவதுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று!

அதுக்கு மானசிக தலைவர் சொல்லி இருப்பார் போலும் மரத்துக்கு ரொம்ப தட்டுப்பாடு இந்த முறை வழுக்கை மரம் தான் இருக்கு அதுவும் உங்க ஏரியாவில் இல்லை. அதனால் தான் அனுபவம் வாய்ந்தவர்களை யானையில் ஏத்துகிறேன் எனவே நமது கட்சி மாகாண சபைக்கு கட்டாயம் நல்ல பச்சை மரத்தில் நான் உங்களில் ஒருவரை ஏற்றுவேன் என்று !

பாசக்காரப் பசங்க தலைவர் கதையைகேட்டு நம்பி வந்திட்டாங்க .

இப்போ இங்க வந்து பாசக்காரப்பயளுகள் கதை சொல்லி , பழைய பழைய விசயங்களை சொல்லி வெற்றிலையையும் சப்ப விடுறாங்க இல்லை . மயிலை பிடிக்க விடுறாங்களும் இல்லை.

அதான் நான் தெளிவா சொல்லிட்டேன் மக்காள் இந்த முறை நான் ஓட்டுபோடமாட்டேன்.

யோசியுங்கோ

யானையா ?

வெத்திலையா?

மயிலா?

வெளியால ஒரு இடத்தையும் போகாம நல்லா யோசிச்சிட்டு இருங்கோ இப்போ யோசிச்சாத்தான் மகாண சபைக்கு எமது ஊரான் ஒருத்தனை எமது சார்பாக அனுப்ப முடியும்!

-முஹம்மட் றுசைக் சபுறுதீன்-