பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டு விழாவும், வடகிழக்கு திரு மாவட்ட அவை தலைவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (17) கோமாரி மெதடிஸ்த ஆலய வளாகத்தில் முகாமைக்குரு அருட் திரு எஸ்.டி.வினோத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி பாதுகாப்பு அபிவிருத்தி இணைப்பாளர் திரு எஸ்.தர்மபாலன், பொத்துவில் நன்னடத்தை காரியாலய பொறுப்பதிகாரி திரு. பு. சசிகரன்,கோமாரி மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி எஸ்.விஜிதினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பல்வேறுபட்ட முன்பள்ளிச்சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்களுக்கான மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஏ. தாஜகான்-