[caption id="attachment_4019" align="alignright" width="219"] இளம் கவிஞன்- ஹலீம் முஹம்மட்[/caption]
இளம் கவிஞர் அறிமுகம்- கவிஞர் பொத்துவில் ஹலீம். அண்மைக்காலமாக இணையத்தளங்கள் மற்றும் வானொலி பத்திரிகை என்று பல ஊடகங்களில் கவித்திறமையினால் தன்னை அடையாளப்படுத்திவிரும் கவிஞர் ஒருவரை உங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பொத்துவில் நெற் மகிழ்ச்சியடைகிறது.
தனது கவிதைகளின் மூலம் தனது பேஸ்புக் பக்கத்தில் 15 ஆயிரம் வாசகர்களை தன்பக்கம் கொண்ட வளர்ந்து வரும் இளம் கவிஞனாக திகழ்ந்து வருகிறார் பொத்துவில் ஹலீம். பொத்துவில் ஹிதாயா புரம் பகுதியில் பிறந்து மத்திய கல்லுாரியில் பயின்ற ஹலீம் தற்போது தொழில் நிமிர்த்தம் வெளிநாட்டில் வசித்துருகிறார்.
இந்த வருடத்திற்குள் ஒரு புத்தகம் உட்பட அடுத்த மாதம் அவருடைய எழுத்தில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இளம் கவிஞனாக மரபு மற்றும் புதுக் கவிதைகள் மூலம் பிராகாசித்து வரும் ஹலீம் உடன் நாம் மேற் கொண்ட உரையாடல்.
[caption id="attachment_4738" align="alignleft" width="269"] இளம் கவிஞன்- ஹலீம் முஹம்மட்[/caption]
கேள்வி- பொத்துவில் நெற் இணையத்தளத்தினால் இளம் கலைஞர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வின் ஊடாக முதலாவது தங்களை அறிமுகம் செய்ய முனைகிறோம் உங்களை பற்றிய அறிமுகம் ஒன்றை தர முடியுமா?
பதில்- நான் ஹிதாயா புரத்தை சேர்ந்தவன் என்னுடைய தந்தையின் பெயர் நசுருதீன் அதற்கு மேல் என்னைப்பற்றி அறிமுகம் எதுவும் எல்லை என்று நினைக்கிறேன்.
கேள்வி - அப்படி சொல்லாதீர்கள் உங்களுடமுள்ள கவித்திறமை பலம் மிக்கது சரி கவிதை எழுதும் பழக்கம் எப்போதிருந்து உங்களிடம் இருக்கிறது?
பதில்- கவிதை எழுதும் பழக்கம் பாடசாலைக் காலத்தில் இருந்து இருக்கிறது அன்றைய பொழுதுகளில் பாடசாலையில் கவிதைகளை எழுதிவிட்டு கிழித்து விடுவேன் யாராவது பார்த்தால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று.
பின்னாலில் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கில் வசிக்க நேர்ந்தது அந்த காலப்பகுதியில் கவிதைகளை எழுதத் தொடங்கினேன் அவ்வாறு எழுதியவற்றை பேஸ்புக்கின் மூலமாக பகிர்ந்தேன் பின்னர் எனது நண்பர்கள் தந்த ஊக்கம் வாழ்துக்கள் பின்னுாட்டங்கள் என்னை அதிகமாக கவிதை எழுதுவதற்கு பழக்கியது அதன் பின்னர் எனது தனிமைகளும் எனது பொழுது போக்கும் கவிதைகள் என்றானது.
கேள்வி- சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்து விட்டது உங்களின் பேஸ்புக் பக்கம் கூட 15 ஆயிரம் விருப்பங்களை (லைக்ஸ்) களை பெற்றுள்ளது தனியே உங்கள் கவிதைகளை மாத்திரம் பதிவேற்றும் பக்கத்தில் இவ்வாரு அதிகமானவர்கள் இணைந்திருப்து உங்கள் கவிதைகளில் அவர்களுக்கு இருக்கின்ற விரும்பமே ஆகவே கண்டிப்பாக நீங்கள் ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோம் அப்படி உங்களிடம் ஏதேனும் புத்தகம் வெளியிடும் எண்ணங்கள் உள்ளனவா?
பதில்- இன்சா அல்லாஹ் நிச்சயமாக எனது கவிதை தொகுப்புகள் புத்தகமாக வரவிருக்கின்றது. அதற்கு முதல் நான் எழுதிய பாடல் ஒன்று இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவர இருக்கிறது அதற்கு பின்னர் புத்தகம் வெளியிட உள்ளேன்.
எனது நண்பர்களும் என்னை புத்தகம் ஒன்றை வெளியிடுமாறு சொல்கின்றனர் முயற்சிக்கிறேன் சரியான சந்தர்ப்பம் ஒன்றில் எனது படைப்புக்களும் இந்த கவிதை உலகத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைல ஒரு லட்சியம் என்ற கனவிருக்கும் அந்த கனவுக்கு உயிர் கிடைப்பது கடினம் போராடனும் அப்படியான கடின போராட்டம்தான் நானும் செய்தேன் அதற்கு உயிர் கொடுத்தவர் அண்ணன் Tharshanan Arutselvan இளம் இசையமைப்பாளர் .
கவிதை எழுதுவது பழக்கமாக அமைந்தது அதை பாடலாக மாற்ற வேண்டும் இசை நதிக்குள் எனது ரசனை வரிகளும் நீந்த வேண்டும் என்று சில வருடமாக கனவு பல கலைஞர்கள்,சில இசையமைப் பாளர்களிடம் தெடர்பு கெண்டேன் யாரும் எனக்கு வழிகாட்டவில்லை என் கவிதையை படியுங்கள் என் இசை,பாடலை பாருங்கள் என்று சொல்லி சொல்லி கொச்சப்படுத்தி குழிபறித்தவர்களே அதிகம். அவர்களுக்கு முன் நானும் வாழனும் என்று முயற்சியை கைவிடவில்லை தொடர்ந்தேன். அண்ணனை தொடர்பு கொண்டு நான் பேசிய பேச்சில் அமைந்திருந்த வலியதை உணர்ந்து நான் சொல்லிய பாடலும் இவருக்கு செய்யக்கூடிய வகையில் அமைந்தது சரி சொல்லி என் கவிதை வரிக்கு உயிர் இசை கொடுத்து கொண்டிருக்கிறார் மிக விரைவில் எனது முதலாவது பாடலை வெளியிட உள்ளோம்.
கேள்வி - உங்கள் ஊர் கவிதைக்கும் நாட்டார் பாடல்களுக்கும் பெயர் போன பிரதேசம் உங்கள் ஊர் கவிஞர்கள் அல்லது கலைஞர்கள் உங்களுக்கு ஏதாவது தட்டிக்கொடுப்புகள் செய்கிறார்களா?
பதில்- சிலரிடம் எனது கவிதைகளை காட்டினேன் அவர்கள் எதுவும் செய்யவில்லை இன்னும் சிலர் என்னை பேஸ்புக்கில் இருந்து துாக்கிவிட்டனர்.
ஓர் இறகு மேகம் ஓராயிரம் வானம் தெரிகிறது அத்தனையும் புன்னகை கவிதையுடன் தொட்டுப் பார்க்க நினைக்கிறேன் இப்போதைக்கு எனக்கு பக்கபலமாக எனது நண்பர்களே இருக்கிறார்கள் குறிப்பாக றுமைட் மற்றும் ஹாஸிம் இருவரும் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.
கேள்வி- கவிதைப் பயணத்தில் சவாலாக இருக்கின்ற விடயங்கள் என்ன?
பதில்- எத்ததுனையோ கவிஞர்கள் கவிதைகள் எம்மை சுற்றி பயணிக்கிறது அவற்றுள் நல்ல கவிதைகளை வாசிக்கின்றவர் ரசித்து ருசிக்கக் கூடிய கவிதைகளை கொடுப்பதே சவால் பொத்துவிலின் அழகு கவிதையை தருகிறது அது தவிற நண்பர்கள் இருக்கிறார்கள் மற்ற சாவால்களை முறியடிக்க.
கேள்வி- உங்களுக்கு பிடித்த கவிஞர் யார்?
பதில்- மாபெரும் கவிஞர் வாலி ஐயா மற்றும் நமது கவிஞர் பொத்துவில் அஸ்மின் இருவரையும் எனக்கு பிடிக்கும்.
கேள்வி- உங்கள் ஊரில் வளர்ந்து வரும் கவிஞராக உங்களை நாம் அடையாளம் காண்கிறோம்வளர்ந்துவரும் கவிஞராக நீங்கள் யாரை அடையாளம் காண்கிறீர்கள்?
பதில்- எனது நண்பன் என் முற்றத்து பூக்கள் எனும் புனைப்பெயரில் இணையத்தில் கவிதை எழுதிவருகிறான் அவனை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள நிறைய அன்பர்களுக்கு தெரியாது அவருடைய பெயர் அஸ்மி அவரை நான் வளர்ந்து வரும் கவிஞனாக காண்கிறேன்.
பொத்துவில் நெற் இவரையும் அறிமுகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி- பேஸ் புக் தவிர்ந்த ஏனைய ஊடகங்களில் உங்கள் கவிதைகள் வெளி வந்திருக்ன்றனவா ?
பதில்- ஆம் சக்தி வானொலி மற்றும் மித்திரன் தினமுரசு போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அனுப்பி வைப்பதில்லை.
கேள்வி- பாடல் ஒன்று வெளிவர இருப்பதாக சொன்னீர்கள் அது தொடர்பில் சொல்ல முடியுமா?
பதில்- இப்போதைக்கு என்றால் அந்தபாடலின் பெயர் “காதல் சொல்லடி” இசை “தர்சன்”
கேள்வி - உங்கள் கவிதைப் புனைப்பெயர் வித்தியாசமாக இருக்கின்றன உதாரணமாக “கற்பனை கிறுக்கன்” , “பரிதவிக்கும் ஓர் இருதயம்” இப்படியான பெயர்களை வைக்க காரணம் என்னவாக இருக்கும்.
பதில்- இதெற்கென வித்தியாசமாய் காரணங்கள் இல்லை சும்மா வைத்துக்கொண்டவைகள்தான் சிலவேலை எனது தனிமைகளாக கூட இருக்கலாம்.
கேள்வி- நீங்கள் நன்றி சொல்ல ஆசைப்படும் நபர்கள் யாராவது இருந்தால் அவற்றை கூட தெரியப்படுத்தலாம்.
பதில்- ஆம் நன்றிகள் சொல்லவேண்டியிருக்கிறது நன்றிகள்சொல்வதை விட நனறியுடையவனாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்னை இந்த அளவுக்கு கவிதைகளை எழுத வைத்தவர்கள் றுமைட் ஹாஸிம் மற்றும் ஹிலால் ஆகிவர்களுக்கும் எனது கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய பழக்கிய ஜகான் பைறுாஸ் ஏனைய எனது உடன்பிறவா நண்பர்களுக்கும் நன்றிகள் அத்துடன் பொத்துவில் நெற் இன் இந்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
ஹலீம் இன் பேஸ்புக் முகவரி- https://www.facebook.com/muhamed.haleem
ஹலீம் இன் கவிதைப்பக்கம்- https://www.facebook.com/TetikKitaittaKatalKavitai
நேர்காணல்- ஹாஸீம் அஹமது முகைதீன்.
இளம் கலைஞர்களை அறிமுகம் செய்ய தொடர்புகொள்ளுங்கள்- pottuvilnet@gmail.com