கலைவான் கழகத்தின் 10 வருட நிறைவை முன்னிட்டு பொத்துவில் வளங்களை முற்று முழுதாக ஒன்றிணைத்து பொத்துவில் நாடகக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் எமது பொத்துவில் மண்ணின் பெருமையான கீறல் திரைப்படத்தினைக் கண்டுகளிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
பொத்துவில் கலைவான் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கலைநிலா M.S.M.றிஸ்வி அவர்கள் இயக்கி மற்றும் பலருடன் நடித்துள்ள 65 நிமிடங்கள் கொண்ட முழு நீளத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 2015 மே மாதம் 1ம் திகதி இடம் பெறவுள்ளது என்பதனைப் பொத்துவில் கலை ரசிகர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றோம்.
கீறல் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுடன் இணைந்த வகையில் திரையிடல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்: பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயக் கேட்போர் கூடம்.
திகதி: 2015.05.01ம் ,02ம் ,மற்றும் 03ம் திகதிகளில் (மூன்று தினங்கள்).
நேரம்: பி.ப 04.00 மணி முதல் பி.ப 09.00 மணி வரை.
காட்சிகள்: பி.ப 04:00 மணி மற்றும் பி.ப 07:00 (இரு காட்சிகள்)
நுழைவுச் சீட்டுக்களை மண்டப நுழைவாயிலில் பெற்றுக் கொள்ளலாம்
தகவல்- கலைவான் கழகம்